#AUSvsIND லபுஷேன் சதம்.. ஆஸி.,யில் அறிமுக போட்டியிலேயே அசத்திய தமிழர்கள்..! நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம்

First Published Jan 15, 2021, 1:57 PM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி., அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸி., முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
undefined
இந்திய அணியில் காயம் காரணமாக 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. 3வது டெஸ்ட்டில் காயமடைந்து, காயத்தால் விலகிய ஹனுமா விஹாரி, ஜடேஜா, அஷ்வின், பும்ரா ஆகிய நால்வருக்கு பதிலாக மயன்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் டி.நடராஜன் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர். இவர்களில், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகிய இருவருக்கும் இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டி. அறிமுக போட்டியிலேயே இருவரும் சிறப்பாக பந்துவீசிவருகின்றனர்.
undefined
ஆஸி., தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். வார்னர் ஒரு ரன்னில் சிராஜின் பந்திலும், ஹாரிஸ் ஐந்து ரன்னில் ஷர்துல் தாகூரின் பந்திலும் ஆட்டமிழந்தனர். அதனால் 17 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஆஸி., அணி.
undefined
அதன்பின்னர் ஆஸி., அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித் மற்று லபுஷேன் இணைந்து சிறப்பாக ஆடிய நிலையில் ஸ்மித்தை 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே, அதுவும் மிகப்பெரிய வீரரான ஸ்மித்தின் விக்கெட்டை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தி அசத்தினார் வாஷிங்டன் சுந்தர்.
undefined
அதன்பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேடும் சிறப்பாக ஆடினார். லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து பாட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்களுக்கு சற்று நேரம் பிடித்தது. லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், அந்த பணியை செவ்வனே செய்த டி.நடராஜன், அவர்கள் 2 பேரையுமே வீழ்த்தினார். மேத்யூ வேடை 45 ரன்களுக்கு அவுட்டாக்கிய நடராஜன், சதமடித்து அச்சுறுத்திய லபுஷேனை 108 ரன்களுக்கு வெளியேற்றினார்.
undefined
213 ரன்களுக்கு ஆஸி., ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேமரூன் க்ரீனும் கேப்டன் டிம் பெய்னும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி., அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது.
undefined
click me!