#AUSvsIND ஒரே மேட்ச்சில் இந்திய அணியில் 2 தமிழர்கள் அறிமுகம்..! இருப்பவர்களை வச்சு கெத்து காட்டும் இந்தியா

First Published Jan 15, 2021, 7:50 AM IST

ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி டெஸ்ட், பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கட்டாயத்தின் பேரில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
undefined
இந்த தொடரின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர் சோகமாகவும் சோதனையாகவும் அமைந்துள்ளது. முதல் போட்டியில் ஷமி, 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ், 3வது டெஸ்ட்டில் பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஷ்வின் ஆகியோர் காயமடைய, இதற்கிடையே 3வது போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎல் ராகுல் என தொடர்ச்சியாக வீரர்கள் காயத்தால் வெளியேறினர்.
undefined
nattu washi
undefined
இவர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் ஆகிய 2 தமிழக வீரர்களுக்கும் இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. 2 தமிழர்களும் ஒரே போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர்களான பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஆகிய ஐந்து பேருமே இல்லாவிட்டாலும் கூட, 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இறங்குமளவிற்கு இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுப்பெற்றுள்ளது.
undefined
இந்திய அணி:ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), மயன்க் அகர்வால், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சிராஜ், டி.நடராஜன்.
undefined
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸி., அணி, 17 ரன்களுக்கே தொடக்க வீரர்கள் வார்னர்(1), மார்கஸ் ஹாரிஸ்(5) ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. லபுஷேனும் ஸ்மித்தும் இணைந்து ஆடிவருகின்றனர். வார்னரின் விக்கெட்டை சிராஜும், மார்கஸ் ஹாரிஸின் விக்கெட்டை தாகூரும் வீழ்த்தினர்.
undefined
click me!