#AUSvsIND கேப்டன் பதவிக்கே லாயக்கு இல்லாத ஆளு.. அவரை முதல்ல கேப்டன்சியிலிருந்து தூக்கி எறிங்க! கவாஸ்கர் அதிரடி

First Published Jan 13, 2021, 4:12 PM IST

ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கே தகுதியில்லாதவர் என்றும், இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடருக்கு பின் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முந்துள்ள நிலையில், 1-1 என சமனடைந்துள்ள நிலையில், பிரிஸ்பேனில் நடக்கவுள்ள தொடரின் முடிவை தீர்மானிக்கும்.
undefined
இந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய ஆஸி., அணி 2வது டெஸ்ட்டில் தோற்றது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸி., அணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்திய அணியை ஆஸி.,யால் ஆல் அவுட் செய்ய முடியவில்லை.
undefined
இந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய ஆஸி., அணி 2வது டெஸ்ட்டில் தோற்றது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸி., அணி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இந்திய அணியை ஆஸி.,யால் ஆல் அவுட் செய்ய முடியவில்லை. வெற்றியுடன் தொடரை தொடங்கியிருந்தாலும், அதன்பின்னர் எதுவுமே ஆஸி.,க்கு சாதகமாக அமையவில்லை. அதனால் ஏற்கனவே கடும் விரக்தியில் இருந்த ஆஸி., கேப்டன் டிம் பெய்ன், சிட்னி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியை ஆல் அவுட் செய்யமுடியாததால் உச்சகட்ட விரக்தியும் வெறுப்பும் அடைந்தார்.
undefined
கடைசி நாள் ஆட்டத்தில், ஆஸி., அணியின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியால் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. ரிஷப் பண்ட்டின் அதிரடியான பேட்டிங், 2 கேட்ச்களை கோட்டைவிட்டது, ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வினின் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றால் கடும் விரக்தியடைந்த ஆஸி., கேப்டன் டிம் பெய்ன், ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்றுகொண்டு பிதற்றிக்கொண்டே இருந்தார். போதாதற்கு அஷ்வினிடம் ஸ்லெட்ஜ் செய்வதாக நினைத்து, மட்டமாக நடந்துகொண்ட டிம் பெய்ன், அஷ்வினிடம் மூக்குடைபட்டார்.
undefined
வேண்டாத விஷயங்களில் கவனத்தை செலுத்தி, காரியத்தை கோட்டைவிடும் கேப்டனாக இருக்கிறார் டிம் பெய்ன். இந்நிலையில், டிம் பெய்ன் கேப்டனாக இருப்பதற்கு லாயக்கில்லாதவர் என்றும் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், இந்த தொடருடன் டிம் பெய்ன் ஆஸி., அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவரது செயல்பாடுகள் கேப்டன் நடந்துகொள்ளும்படியாக இல்லை. தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அவரது பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!