இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 12ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்த டி20 தொடருக்கு, 19 வீரர்களை கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா ஆகிய 3 வீரர்களும் முதல் முறையாக இடம்பெற்றிருந்தனர். இந்திய அணியில் முதல் முறையாக இவர்கள் சேர்க்கப்பட்டனர்.
டி20 தொடருக்கான இந்திய அணி:விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.(இவர்களில் வருண் சக்கரவர்த்தி ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால் அணியில் இல்லை).
இந்நிலையில், அறிமுக வீரர்கள் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மண், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா ஆகிய மூவருக்குமே இந்திய அணியின் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. இந்திய பேட்டிங் ஆர்டர் ஏற்கனவே சிறப்பாக உள்ளது. அதில் எந்தவித சிக்கலும் இல்லை. 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 5ம் வரிசையில் ரிஷப் பண்ட், 6ம் வரிசையில் ஹர்திக் பாண்டியா என பேட்டிங் ஆர்டர் ஏற்கனவே செட்டில் ஆகியிருப்பதால், சூர்யகுமார், இஷான் கிஷன், ராகுல் டெவாட்டியா ஆகிய மூவருக்குமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.