2024-ம் ஆண்டு நிலவரப்படி, விராட் கோலியின் நிகர மதிப்பு 1,000 கோடி ரூபாய் (சுமார் $127 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. விராட் கோலியின் சொத்துக்கள் முதன்மையாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து வந்தவை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான (பிசிசிஐ) ஒப்பந்தங்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடுவதன் மூலம் விராட் கோலி பெரும் தொகையை ஈட்டுகிறார்.
அதேபோல், விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு உலகளவில் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பிராண்ட் மதிப்புள்ள நபராக விராட் கோலி உள்ளார். பாலிவுட் நட்சத்திரங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதன் மூலம் விராட் கோலி தனது கிரிக்கெட் வருமானத்துடன், உலகின் முன்னணி பிராண்டுகளுடனான பல ஒப்பந்தங்கள் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கிறார்.
உலகின் மிகவும் போற்றப்படும் டாப்-10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினா கேப்டன், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து போர்ச்சுகல் கேப்டன், கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் உள்ளார்.