
விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த போது தோனி தான் என்னை சீக்கு சீக்கு என்று கூப்பிட்டு அந்த பெயரை பிரபலமாக்கிவிட்டார் என்று விராட் கோலி கூறியிருக்கிறார். என்னது விராட் கோலிக்கு சீக்கு என்று புனைப்பெயர் இருந்ததா? ஏன் அவ்வாறு பெயர் வந்தது? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…
விராட் கோலியின் செல்லப் பெயர் சீக்கு. இந்தப் பெயர் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைய காரணம் எம்.எஸ்.தோனி. தோனி முதலில் சீக்கு சீக்கு என்று கூப்பிட அதன் பிறகு ரசிகர்களும் அப்படியே கூப்பிட தொடங்கிவிட்டனர்.
சீக்கு சீக்கு என்று ஏன் அழைத்தார்கள் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் விராட் கோலி இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடினர்.
விராட் கோலியின் குண்டான் கன்னம், பெரிய காதுகள் ஆகியவற்றின் காரணமாக ரஞ்சி டிராபி தொடரின் போது விராட் கோலிக்கு சீக்கு என்ற புனைப் பெயரை பெற்றார்.
ஏனென்றால், பயிற்சியாளர் ஒருவர், கோலியை காமிக் புத்தகமான சம்பக் -ல் உள்ள கார்ட்டூன் கதாபாத்திரமான சீக்கு தி ரேபிட் உடன் ஒப்பிட்டு பேசினார். இதன் காரணமாக விராட் கோலிக்கு சீக்கு என்ற புனைப் பெயர் வந்தது.
இது குறித்து பீட்டர்சன் இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில் கோலியிடம் கேட்டார். அதற்கு கோலி, ரஞ்சி டிராபி தொடரின் போது பயிற்சியாளர் ஒருவர் எனக்கு இந்த புனைப்பெயர் வைத்தார்.
அப்போது எனக்கு குண்டான கன்னம், பெரிய காதுகள் இருந்தன. 2007 ஆம் ஆண்டு எனக்கு முடி உதிர தொடங்கியது. இதன் காரணமாக அதிகளவில் முடி வெட்டப்பட கன்னமும், காதுகளும் பெரியதாக தெரிந்தன. இதன் அடிப்படையில் காமிக் புத்தகத்தில் உள்ள கார்ட்டூன் கதாபாத்திரம் தான் சீக்கு. அந்த பெயர் என்க்கு கிடைத்தது.
இது சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமடைய காரணம் தோனி தான். அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் போது சீக்கு சீக்கு என்று அழைத்து பேமஸாக்கிவிட்டார். ஸ்டம்புகளுக்கு பின்புறம் நின்று கொண்டு தோனி சீக்கு சீக்கு என்று கூப்பிடவே ரசிகர்களும் என்னை அவ்வாறே அழைத்தனர்.
ஏய் சீக்கு ஒன் போட்டோ என்று கேட்பார்கள். அவர்களிடம் எனக்கு பெயர் இருக்கிறது. உங்களுக்கு தெரியாதா? என்று கேட்பேன். ஆதலால், நீங்கள் என்னை சீக்கு என்று அழைக்க முடியாது என்று கூறி சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறார். கடைசியாக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடினார்.
இதையடுத்து வரும் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் துலீப் டிராபி தான். துலீப் டிராபி தொடரில் வீரர்கள் விளையாடுவதை கண்டு இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள் விளாசியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேனின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்வார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 152 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதோடு, இங்கிலாந்தின் கிரஹாம் கூச்சின் 8900 ரன்கள் சாதனையை முறியடிப்பார்.
இதே போன்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 19 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அடித்தால் 30 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
வங்கதேச அணிக்கு எதிராக 32 ரன்கள் எடுத்தால் சட்டேஷ்வர் புஜாராவின் 468 ரன்கள் சாதனையை முறியடிப்பார். இதுவரையில் வங்கதேச அணிக்கு எதிராக புஜாரா 437 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமானது, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலியின் இந்த 50 சதங்கள் சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க முடியாது.