Virat Kohli: கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை கண்ட விராட் கோலியின் டாப் சீக்ரெட் தத்துவங்கள் என்னென்ன!

First Published | Sep 13, 2024, 9:14 PM IST

Virat Kohli: சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் காலத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய விராட் கோலி, ஏற்றத் தாழ்வுகளையும், விமர்சனங்களையும் சந்தித்து இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

Virat Kohli

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் காலத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் விராட் கோலி. ஆரம்பத்தில் ஏற்றத் தாழ்வுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த விராட் கோலி இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதோடு டிராபி வென்ற நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார். விராட் கோலியின் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்கள் அவரை பின் தொடர காரணமாக அமைந்தது.

Virai Kohli Test Records

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் காலத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் விராட் கோலி. ஆரம்பத்தில் ஏற்றத் தாழ்வுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த விராட் கோலி இன்று அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதோடு டிராபி வென்ற நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார். விராட் கோலியின் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரசிகர்கள் அவரை பின் தொடர காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தான் ஒவ்வொரு இளைஞருக்கும் ரோல் மாடலாக திகழும் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அதில் சிலவற்றை பற்றி பார்க்கலாம் வாங்க.

Tap to resize

Virat Kohli

வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்பை மதிக்க வேண்டும்:

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி டிராபி வென்ற பிறகு பேசிய விராட் கோலி ஒருவர் மட்டுமே முன்னேற முடியும். எவர் ஒருவர் வாய்ப்பிற்கு மதிப்பளிக்கிறாரோ அவரால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு டிராபியை விராட் கோலி வென்றார்.

ஐபிஎல் தொடரில் ஆக்ரோஷமாக காணப்பட்ட கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் சொதப்பினாலும், இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி அடித்துக் கொடுத்த 76 ரன்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த தொடரில் மட்டும் கோலி 156 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli Life Story

கடவுளின் திட்டம்:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திட்டத்தை கடவுள் வகுத்து வைத்திருக்கிறார். கடவுள் திட்டத்தை நம்ப வேண்டும். கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையானது சாதனைகளால் நிறைந்தது. 2008 ஆம் ஆண்டு அண்டர்18 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்று அனைவரது கவனம் ஈர்த்தார். சச்சின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். கோலி தனது முதல் போட்டியிலே சதம் விளாசி சாதனை படைத்தார்.

இவ்வளவு ஏன், 2013 ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதில் விராட கோலி குறிப்பிடத்தக்க சாதனையை படைத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் 2 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரு முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.

Virat Kohli Cricket Career

கடினமாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்:

ஒவ்வொரு முறையும் மோசமான ஃபார்முக்கு வரும் போது, நான் கடினமாக உழைக்கப் போகிறேன், மீண்டும் எழுந்திருக்க போகிறேன் என்று ஒரு ஆன்லைன் நேர்காணலின் போது கூறியிருக்கிறார். இவ்வளவு ஏன், கோவிட் நேரத்தில் கோலி கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டார். அப்போது, சர்வதேச சதம் அடிப்பதற்கு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார்.

2022 டி20 உலகக் கோப்பையின் போது மறுபிரவேசம் எடுத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 159 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கோலி அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ரிஸ்க் எடுக்க வேண்டும்:

ரிஸ்க் எடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. பாதுகாப்பான விருப்பம் என்று எதுவும் கிடையாது. வாழ்க்கையில் பாதுகாப்பான விஷயம் என்று எதுவும் கிடையாது. ஆதலால், வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது முக்கியம்.

விடிவதற்கு முன்பு இரவு இருட்டாக தான் இருக்கும்:

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், அவரை நீக்க வேண்டும் என்று கூட விமர்சனம் எழுந்தது. ஆனால், கடைசியில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவே அவர் இருந்தார். அவரது 76 ரன்கள் தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று டிராபியை கைப்பற்ற வழி வகுத்தது.

Latest Videos

click me!