#AUSvsIND நல்லா போய்ட்டு இருந்த மேட்ச்ல செம ட்விஸ்ட்டு..! கோலியை அவுட்டாக்கி தானும் அவுட்டான ரஹானே

First Published | Dec 17, 2020, 5:01 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி-ரஹானே சீனியர் ஜோடி தேவையில்லாமல் படுமோசமாக பார்ட்னர்ஷிப்பை முறித்துக்கொண்டனர்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இது, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் களமிறங்கினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரித்வி ஷா டக் அவுட்டானார். மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கு பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழக்க, புஜாரா 43 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி 100 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
Tap to resize

அதன்பின்னர் அணியின் கேப்டனும் துணை கேப்டனுமான, கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். சீனியர் வீரர்களான கோலியும் ரஹானேவும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த கோலி, சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்க, 74 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். நேதன் லயன் வீசிய 77வது ஓவரின் கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்த ரஹானே, ரன்னுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து கோலி வேகமாக ஓடி, பாதி பிட்ச்சுக்கு சென்ற நிலையில், ரஹானே வேண்டாம் என்று கூற, இதற்கிடையே பந்தை பிடித்த ஹேசில்வுட், பவுலர் லயனிடம் வீசி கோலியை ரன் அவுட்டாக்கினார்.
ரஹானே பாதியில் ரன் வேண்டாம் என்று மறுத்ததால் தான் கோலி ரன் அவுட்டானார். அணியின் சீனியர் வீரர்களான கோலி மற்றும் ரஹானேவுக்கு இடையே புரிதல் பற்றாக்குறை இருந்தது பார்க்க ரசிக்கும்படியாக இல்லை. கோலியை தொடர்ந்து ரஹானேவும் 42 ரன்களுக்கு ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி பதினாறு ரன்களுக்கு நடையை கட்ட, இந்திய அணி, 206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில் ரிதிமான் சஹாவும் அஷ்வினும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.

Latest Videos

click me!