#AUSvsIND முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும்..! கபில் சார் நீங்களே இப்படி சொல்லலாமா?

First Published | Dec 17, 2020, 3:58 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி அதிகமான பகலிரவு போட்டிகளில், அதுவும் சொந்த மண்ணில் நிறைய பகலிரவு போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட அணி. ஆனால் இந்திய அணிக்கு இதுதான் 2வது பகலிரவு டெஸ்ட். கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட்டில் ஆடியது. அதன்பின்னர் இந்த போட்டி தான் 2வது போட்டி.
இந்நிலையில், அடிலெய்டில் நடக்கும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பிருப்பதாக கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில் தேவ், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம். இந்திய அணி இந்தியாவில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் ஆடினால் 80 சதவிகித வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்குத்தான் இருக்கிறது என்று நான் உறுதியாக சொல்லுவேன். ஆனால் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் நிறைய பிங்க் பந்து டெஸ்ட்டில் ஆடி நல்ல அனுபவம் கொண்ட அணி. அந்த கண்டிஷனும் நன்றாக தெரிந்திருக்கும்.
Tap to resize

மேலும் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அதிகமாக பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். சில நேரங்களில், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகிறது என்பதற்காக, அதிகமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், நமது பலம் என்னவென்பதை அறிந்து, அதற்கேற்ப, அதன்படி பந்துவீச வேண்டும். இந்திய அணியில் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் இருக்கலாம். ஆனால் ஆஸி., பவுலர்களுக்கு அந்த கண்டிஷன் நன்றாக தெரியும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!