#AUSvsIND நெட்டில் கோலி, ரஹானே, புஜாராவின் விக்கெட்டை எல்லாம் தட்டி தூக்கிய நடராஜன்..! அணி நிர்வாகம் செம குஷி

First Published Dec 15, 2020, 2:42 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், வலைப்பயிற்சியில் இந்திய அணியின் பெருந்தலைகளான விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையிலான பவுலிங்கை வீசி மிரட்டியிருக்கிறார் நடராஜன்.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவிலேயே உள்ளார்.
undefined
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி(நாளை மறுநாள் வியாழக்கிழமை) அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ள நிலையில், வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
undefined
வலைப்பயிற்சியில் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருடன், வலைப்பயிற்சி பவுலர்களாக எடுக்கப்பட்ட நடராஜன், ஷர்துல் தாகூர் என அனைவரையும் வீசவைத்து, கோலி, ரஹானே, புஜாரா, மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி என அனைவரும் தீவிரமாக பேட்டிங் பயிற்சி செய்துவருகின்றனர்.
undefined
தனது அபாரமான பவுலிங்கால் ஆஸ்திரேலிய வீரர்களை அலறவிட்டு, கேப்டன் விராட் கோலியின் நன்மதிப்பை சம்பாதித்த நடராஜன், வலைப்பயிற்சியில் கோலியையே அலறவிட்டுவிட்டார். வலையில் நடராஜன் மிகச்சிறப்பாக பந்துவீசிவருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் விக்கெட்டை எடுக்குமளவிற்கான பந்துகளை நடராஜன் வீசியிருக்கிறார்.
undefined
சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான ரஹானே, புஜாரா ஆகிய இந்திய அணியின் முக்கியமான வீரர்கள், நடராஜனின் பவுலிங்கில் ஆடிய ஷாட்டுகள் நிஜ களமாக இருந்திருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் அல்லது பந்தை ஆடாமல் எல்பிடபிள்யூ ஆகியிருக்கும் என்று ஆஸி.,யிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலையில் நடராஜனின் பவுலிங்கை கண்டு அணி நிர்வாகம் செம மகிழ்ச்சியில் உள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைப்பந்தில்(ஒருநாள் மற்றும் டி20) தனது திறமையை நிரூபித்த நடராஜன், சிவப்பு பந்திலும் நெட்டில் அருமையாக வீசுவதால், டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
undefined
click me!