பத்தாண்டின் சிறந்த டி20 லெவன்: ரோஹித், கோலி, பொல்லார்டு இருக்கும் அணியில் கேப்டன் வேற வீரர்

First Published Dec 14, 2020, 8:32 PM IST

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டி20 லெவனை பார்ப்போம்.
 

கடந்த பத்தாண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி கோலோச்சிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. தனது பார்வையில் பத்தாண்டின் சிறந்த டி20 லெவன் வீரர்கள் யார் என்பதை தனது யூடியூப் சேனலில் தேர்வு செய்துள்ளார்.
undefined
அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசை வீரராக கோலியையும், 4ம் வரிசை வீரராக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனையும், விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஃபினிஷர்களாக பொல்லார்டு மற்றும் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக ரஷீத் கானையும், ஃபாஸ்ட் பவுலர்களாக மலிங்கா, பும்ரா, ஸ்டார்க் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
undefined
இந்த அணியில் கேப்டன்சிக்கு தகுதியான, சர்வதேச அணிகளை வழிநடத்தியுள்ள மற்றும் வழிநடத்திவரும் வீரர்கள் நிறைய உள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, பொல்லார்டு, லசித் மலிங்கா, ஷகிப் அல் ஹசன் ஆகிய கேப்டன்சிக்கு தகுதியான வீரர்கள் பலர் இருந்தும், அவர்களில் மலிங்காவை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
undefined
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டி20 லெவன்:ரோஹித் சர்மா, ஆரோன் ஃபின்ச், விராட் கோலி, ஷகிப் அல் ஹசன், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு, க்ளென் மேக்ஸ்வெல், ரஷீத் கான், லசித் மலிங்கா(கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க்.
undefined
click me!