வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?

Published : Dec 05, 2025, 02:47 PM IST

ராஞ்சியில் சதம் அடித்த பிறகு பேசிய விராட் கோலி, ''நான் ஒருபோதும் அதிக பயிற்சியை நம்பியதில்லை'' என்று கூறியிருந்தார்.

PREV
14
விராட் கோலி அடுத்தடுத்து சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடி வரும் நிலையில், முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த இரண்டு போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அதாவது ராஞ்சியிலும் சதம் (135 ரன்கள்) விளாசிய விராட் கோலி, ராய்ப்பூரிலும் சதம் (102 ரன்கள்) சதம் விளாசி சாதனை படைத்தார்.

24
அதிக பயிற்சியை நம்பியதில்லை

ராஞ்சியில் சதம் அடித்த பிறகு பேசிய விராட் கோலி, ''நான் ஒருபோதும் அதிக பயிற்சியை நம்பியதில்லை. இது உங்களுக்குப் புரிந்தால். எனது கிரிக்கெட் அனைத்தும் மனதளவில் சம்பந்தப்பட்டது. நான் மனதளவில் நன்றாக உணரும் வரை, என்னால் விளையாட முடியும். நான் 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள் மற்றும் கடந்த 15-16 ஆண்டுகளில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். 

ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் ஓய்வு இல்லாமல் வலைப்பயிற்சியில் பேட் செய்ய முடிந்தால், நீங்கள் அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்கிறீர்கள் என்று பொருள்'' என்று கூறியுள்ளார்.

34
உடல் தகுதி மிகவும் முக்கியம்

''நீங்கள் பந்தை நன்றாக அடிக்கும் வரையிலும், நல்ல கிரிக்கெட் விளையாடும் வரையிலும், இந்த நிலையில் எனக்கு இருக்கும் அனுபவத்துடன், எனக்கு முக்கியமானது உடல் தகுதி, மனதளவில் தயாராக இருப்பது மற்றும் நான் விளையாடும் போட்டிகளில் விளையாட உற்சாகமாக இருப்பதுதான். மற்ற அனைத்தும் தானாகவே சரியாகிவிடும்'' என்றும் கோலி கூறியிருந்தார்.

44
பிசிசிஐ அதிருப்தி; கோலி மனம் மாற்றம்

இந்திய அணியில் இடம்பிடிக்க மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நான் ஒருபோதும் அதிக பயிற்சியை நம்பியதில்லை' என்று விராட் கோலி கூறியது முதல் தர போட்டியில் விளையாட வேண்டும் என்ற தங்கள் கருத்தை அவமதிப்பு போல் உள்ளதாக பிசிசிஐ கருதியது.

இதனால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன்பிறகு மனம் மாறிய விராட் கோலி இப்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories