விராட் கோலி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் அபரிமிதமான சொத்துகளை குவித்துள்ளார். சமீபத்திய நிலவரப்படி, விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1,250 கோடி என தகவல்கள் கூறுகின்றன. விராட் கோலி இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகள் வாயிலாகவும், ஐபிஎல் போட்டிகள் வாயிலாகவும் வருமானம் ஈட்டியுள்ளார்.
விராட் கோலியின் வருமானம் என்னென்ன?
பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் ஐபிஎல் சம்பளம்: ஒரு மைய ஒப்பந்த வீரராக, கோலி பிசிசிஐயிடமிருந்து ஆண்டுதோறும் ரூ.7 கோடி சம்பாதிக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) உடனான அவரது ஐபிஎல் ஒப்பந்தம் அவருக்கு ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி வழங்குகிறது. விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் சம்பளமாக பெற்றார். டி201க்கு ரூ.3 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.