இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி (59) மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ்(84) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. கோலி - டுப்ளெசிஸின் அரைசதங்களால் 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. 175 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டிவருகிறது.