ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் நன்றாக ஆடிவருகின்றன. பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளும் நன்றாக ஆடிவருகின்றன.
ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகள் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துவருகின்றன. டெல்லி கேபிடள்ஸ் அணி மட்டும் தான் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. ஆடிய 5 போட்டிகளிலும் படுதோல்விகளை சந்தித்துள்ளது. எனவே முதல் வெற்றியை எதிர்நோக்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி இன்று கேகேஆரை எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
கேகேஆர் அணிக்கு ஓபனிங் காம்பினேஷன் சரியாக அமையவில்லை. எனவே தொடக்க ஜோடியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்படும். ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் களமிறக்கப்படலாம். குர்பாஸ் விக்கெட் கீப்பிங் செய்துவந்த நிலையில், அவர் நீக்கப்பட்டால், நாராயண் ஜெகதீசன் விக்கெட் கீப்பிங் செய்வார்.
உத்தேச கேகேஆர் அணி:
ஜேசன் ராய், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யஷ் துல், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அபிஷேக் போரெல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.