டெல்லி கேபிடல்ஸ்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடந்து வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டும் 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
மிட்செல் மார்ஷ்
அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களின் பேட் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாஷ் துல்
கடந்த 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேபிடல்ஸ்
பின்னர், ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் மணீஷ் பாண்டே மட்டுமே 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். என்னதான் ஜெயிக்க வேண்டிய போட்டியாக இருந்தாலும் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டேவிட் வார்னர்
இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி நாளை டெல்லியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையிலான 28ஆவது போட்டி நடக்கிறது. இதற்காக டெல்லி அணி வீரர்கள் பெங்களூருவிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பில் சால்ட்
வீரர்கள் டெல்லியில் தரையிறங்கிய போது அவர்களது உடமைகளிலிருந்து, பேட், பேடு, கிளவ்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான பயணத்திற்கு பிறகு ஒரு நாள் கழித்து சரக்குகளில் இருந்து கிட் பேக்குகள் வந்ததால், ஒரு நாள் கழித்து தான் தங்களது உபகரணங்கள் திருடப்பட்டிருப்பதாக வீரர்கள் அறிந்துள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ்
இதில், யாஷ் துல் தனது 5 பேட்டுகளை இழந்துள்ளார். டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது 3 பேட்டுகளை இழந்துள்ளார். மிட்செல் மார்ஷ் தனது 2 பேட்டுகளை இழந்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ்
பில் சால்ட் தனது 3 பேட்டுகளை இழந்துள்ளார். இதன் மதிப்பி மில்லியன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இதனுடைய மதிப்பு மொத்தமாக ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவிக்கலாமா என்பது தொடர்பாக டெல்லி அணி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.