Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!

Published : Sep 28, 2026, 10:04 PM IST

Virat Kohli: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 15,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே தனக்கு முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
14
விராட் கோலி சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூப்பர்ஸ்டார் விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். போட்டி முடிந்த பிறகு, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான கில்லின் தலைமைப் பண்பையும் பேட்டிங் திறமையையும் கோலி பாராட்டினார். அதேபோல, சிறு வயதில் கோலியை ரோல் மாடலாகப் பார்த்து வளர்ந்து, இன்று அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது குறித்து கில் நெகிழ்ச்சியாகப் பேசினார்.

24
விராட் கோலியின் மாஸ் சதம்

திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 299 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. ஆனால், விராட் கோலியின் 86-வது சர்வதேச சதமும், கில்லின் சிறப்பான சதமும் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தன. இந்த போட்டியில் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள் என்ற மாபெரும் மைல்கல்லையும் கடந்தார். இந்திய அணி இன்னும் 8 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையிலேயே, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

34
கோலி குறித்து பெருமையாக பேசிய கில்

பிசிசிஐ (BCCI) வெளியிட்ட ஒரு வீடியோவில் சுப்மன் கில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இதற்கு முன்பு ஜனவரி 2023-ல் இலங்கைக்கு எதிராக இதே திருவனந்தபுரம் மைதானத்தில் இருவரும் இணைந்து சதம் அடித்திருந்தனர். அதை நினைவுகூர்ந்த கில், "இங்கு பாஜியுடன் (கோலி) பேட்டிங் செய்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. திருவனந்தபுரத்தில் அவருடன் இரண்டு முறை பேட்டிங் செய்திருக்கிறேன். இரண்டு முறையும் நாங்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து, சதமும் அடித்திருக்கிறோம்.

விராட் பாய் தனது 15,000 ஒருநாள் ரன்களை எட்டும்போது, நான் அவருடன் களத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு, அவருடன் இணைந்து விளையாடும் இந்த பயணம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இன்னும் நிறைய நினைவுகளை அவருடன் உருவாக்குவேன் என நம்புகிறேன்," என்றார்.

44
நம்பர்ஸ் முக்கியமில்லை

15,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது குறித்து விராட் கோலி பேசினார். இது ஒரு பெரிய நம்பர் என்றாலும், கடினமான சூழ்நிலைகளில் இருந்து அணியை வெற்றி பெற வைப்பதே தனது முக்கிய நோக்கம் என்றார். தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடினால், கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அணி வெற்றி பெறுவது தான் முக்கியம்

"நம்பர்கள் அடிப்படையில் பார்த்தால், இது ஒரு பெரிய விஷயம் தான். ஆனால், கடினமான நேரங்களில் அணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய சிம்பிளான இலக்கு. இத்தனை வருடங்களாக நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்.

அணியின் வெற்றிக்காக விளையாடினால் மட்டுமே உங்களால் இவ்வளவு நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட முடியும். வெறும் நம்பர்களுக்காக விளையாடினால், உங்களின் முக்கிய இலக்கை நீங்கள் தவறவிட நேரிடும். இவ்வளவு காலம் இந்த இடத்தில் இருப்பதற்கும், இந்த பெரிய மைல்கல்லை எட்டி அணியை வெற்றி பெற வைத்ததற்கும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று கோலி கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories