100 டெஸ்ட் போட்டியில் ஆடியும் இந்திய அணியில் அவர் 3வது ஆப்சனாகவே இருப்பது பெரிய சர்ப்ரைஸ் - வெங்கடேஷ் பிரசாத்

First Published Jun 14, 2021, 3:46 PM IST

100 சர்வதேச போட்டிகளில் ஆடிய இஷாந்த் சர்மா இந்திய அணியில் இன்னும் 3ம் ஆப்சன் ஃபாஸ்ட் பவுலராகவே இருப்பது சர்ப்ரைஸாக இருப்பதாக முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

ஒரு ஃபாஸ்ட் பவுலர் 100 சர்வதேச போட்டிகளில் ஆடுவது மிகக்கடினமான விஷயம். அப்படி 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய வெகுசில ஃபாஸ்ட் பவுலர்களில் இந்தியாவின் இஷாந்த் சர்மாவும் ஒருவர். 2007ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் இஷாந்த் சர்மா 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 303 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
undefined
ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் பும்ரா, ஷமிக்கு அடுத்த 3வது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாகத்தான் இஷாந்த் சர்மா இருக்கிறார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கூட பும்ரா, ஷமி ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக யாரை சேர்ப்பது என்பது குறித்துத்தான் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
undefined
அந்தளவிற்கு 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இஷாந்த் சர்மாவுக்கு மாற்று என்கிற இடத்தை வெகு விரைவாக முகமது சிராஜ்பிடித்துவிட்டார். ஆனால் பும்ராவோ ஷமியோ அணியில் டாப் 2 பவுலர்களாக நிரந்தர இடத்தை பிடித்துவிட்டனர்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள வெங்கடேஷ் பிரசாத், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான உத்தி மிக எளிதானது. புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். பும்ரா, ஷமி ஆகிய இருவரின் சீம் பொசிசனும், லைன் & லெந்த்தில் கண்ட்ரோலும் அருமையாக இருக்கும். 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இஷாந்த் சர்மா, இன்னும் அணியில் 3வது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாகவே இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவ்வளவுக்கும் அவருக்கு கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய அனுபவமும் இருக்கிறது என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.
undefined
click me!