#ICCWTC ஃபைனல்: ரோஹித் இதை மட்டும் பண்ணா போதும்.. தவறான பந்து அதுவாகவே கிடைக்கும்.. அதை விளாசி தள்ளலாம்

First Published Jun 13, 2021, 6:56 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மாவிற்கு வீரேந்திர சேவாக் ஆலோசனை கூறியுள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் சமபலம் வாய்ந்த இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அதனால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
undefined
இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும். பின்வரிசையில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி முக்கியமான ரன்களை விரைவாக குவித்துக்கொடுக்க வல்லவர். ஆனால் ரோஹித்தும் கோலியும் சிறப்பாக ஆடுவது அவசியம். குறிப்பாக தொடக்க வீரர் ரோஹித் சர்மா தான் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.
undefined
அந்தவகையில், ரோஹித் சர்மா முக்கியமான வீரர். இந்நிலையில், இங்கிலாந்து கண்டிஷனில் ரோஹித் சர்மா எப்படி ஆட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.
undefined
இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், இங்கிலாந்து கண்டிஷனில் ஆரம்பத்தில் 10 ஓவர்கள் நிதானமாக ஆடி செட்டில் ஆகிவிட்டு, அதன்பின்னர் அடித்து ஆட வேண்டும். ரோஹித் சர்மா இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர். எனவே என்னை பொறுத்தமட்டில் அவருக்கு என்னுடைய அறிவுரை, புதிய பந்தில் அவசரப்படாமல், அதற்கு மதிப்பளித்து பொறுமையாக ஆட வேண்டும் என்பதுதான். நிதானமாக தொடங்கி செட்டில் ஆன பின்னர், தவறான பந்துகள் கிடைக்கும். அவற்றை அடித்து ஸ்கோர் செய்ய வேண்டும் என்று சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.
undefined
click me!