ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு இந்திய அணியில் சர்வதேச லெவலில் ஆடும் வீரர்கள் நிரம்பியுள்ளனர். விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, ரஹானே, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடுகிறது.
அதே சமயத்தில் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வேறு வீரர்களை கொண்ட இந்திய அணி ஆடுகிறது. தவான் தலைமையிலான அந்த அணியில் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சகாரியா, சைனி, சாஹல், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆடுகிறது.
ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு இந்திய அணியில் சர்வதேச அளவில் ஆடுமளவிற்கான திறமையான வீரர்கள் நிறைந்துள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் ராகுல் டிராவிட்.
இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கான திறமையான மற்றும் பக்குவப்பட்ட வீரர்களாக உருவாக்கி கொடுத்தவர் ராகுல் டிராவிட் என்பது அனைவரும் அறிந்ததே.
அதை சுட்டிக்காட்டியுள்ளார் டேவிட் வார்னர். இதுகுறித்து பேசியுள்ள டேவிட் வார்னர், இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐபிஎல் சிறந்த அடித்தளமாக அமைந்தது. இந்திய கிரிக்கெட் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கான மொத்த கிரெடிட்டும் ராகுல் டிராவிட்டையே சாரும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவதற்கு தயாராக பல வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட். இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஆடியபோதே அதை பார்த்தோம். எதிர்காலத்தில் இந்திய அணி மிகச்சிறந்த அணியாக திகழப்போகிறது என்பது இப்போதே தெரிகிறது என்று வார்னர் தெரிவித்தார்.