நல்ல பவுலர்.. அவரோட துரதிர்ஷ்டம் இந்திய அணியில் இடம் கிடைக்கல - சஞ்சய் மஞ்சரேக்கர்

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்படாதது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.
 

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய மெயின் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதால், தவான் தலைமையிலான அடுத்த லெவல் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடுகிறது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.நெட் பவுலர்கள் - இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.

இந்திய அணியில் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.
இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நல்ல அனுபவம் கொண்டவர் ஜெய்தேவ் உனாத்கத். அவரை அணியில் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. மெயின் அணி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதால் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் வலுவானதாக இல்லை. ஐபிஎல்லில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், முதல் தர கிரிக்கெட்டில் அசத்துபவர் உனாத்கத். இந்த ஆண்டில் கூட அவரது 2 பெர்ஃபாமன்ஸ் அவரது கிளாஸை காட்டியது. அவர் அணியில் சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டவசமானதுதான் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!