Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷி பேன்ட்டை கழட்டி கையில் கொடுத்திருப்பான்.. அப்படி என்றால் என்ன? ரவி சாஸ்திரி சொன்ன தகவல்

Published : Jul 02, 2026, 07:14 PM IST

அயர்லாந்து தொடரிலேயே 15 வயதான அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடியிருக்க வேண்டும். அழுத்தம் இல்லாத இளம் வீரரை பெஞ்சில் அமர வைப்பது சரியல்ல என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

PREV
17
15 வயது அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஈர்த்தார். இதனையடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் தொடரில் அவரது பெயம் இடம் பெற்றிருந்தது. ஆனால் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் களம் இறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சொன்ன கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து பயணத்தின்போதே வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

27
0-2 என்ற கணக்கில் தோல்வி

தேசிய அணியுடன் வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்துக்குச் சென்றதுதான் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். முதல் போட்டியிலேயே வைபவின் அதிரடி ஆட்டத்தைக் காண இந்தியா காத்திருந்தது. ஆனால், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தங்களது T20 அறிமுக போட்டியில் களமிறங்க, வைபவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இறுதியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

37
ரவி சாஸ்திரியின் கருத்து

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய ரவி சாஸ்திரி, வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். கூடிய விரைவில் அந்த இளம் வீரருக்கு இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போது வைபவின் ஆட்டம் குறித்தும் ரவி சாஸ்திரி தனது கருத்து ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

47
பேண்ட்டை கழற்றி கையில் கொடுத்திருப்பான்

இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி ஆடுவாரா என்று தொகுப்பாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, 'அவன் அயர்லாந்திலேயே ஆடியிருக்க வேண்டும். அயர்லாந்து மைதானம் சிறியது, பந்துகளை ஸ்டேடியத்திற்கு வெளியே பறக்கவிட்டு இருப்பான். அங்கேயே அவன் பேண்ட்டை கழற்றி கையில் கொடுத்திருப்பான்' என்று கூறினார்.

57
பெஞ்சில் ஏன்?

கூடிய விரைவில் வைபவை இந்திய அணி களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரவி சாஸ்திரி, 'ஐபிஎல்-இல் எந்த வேகப்பந்து வீச்சாளரையும் வைபவ் சூர்யவன்ஷி விட்டுவைக்கவில்லை. அவரை ஏன் பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை' என்றார். மேலும், வைபவ் சூர்யவன்ஷியை ஏன் ஆடவைக்க வேண்டும் என்றும் சாஸ்திரி விளக்கினார்.

67
ஏன் ஆடவைக்க வேண்டும்?
வைபவ் சூர்யவன்ஷி மீது எந்த அழுத்தமும் இல்லை. 15 வயது மட்டுமே ஆகும் இளம் வீரரான அவருக்கு எந்த பயமும் இல்லை. முதல் 2-3 ஓவர்களில் களமிறங்கினாலும், அணியில் தனக்கான இடத்தைப் பிடித்துவிடுவார். அதற்காகவாவது வைபவ் சூர்யவன்ஷியை ஆடவைக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.
77
விரைவில் அறிமுகமாகும் வாய்ப்பு

அப்போது தொகுப்பாளர், 'பேண்ட்டை கழற்றி கையில் கொடுப்பது என்றால் என்ன அர்த்தம்?' என்று ரவி சாஸ்திரியிடம் கேட்டார். அதற்கு, 'ஒருவரைத் தோற்கடிப்பது அல்லது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது' என்று அர்த்தம் என விளக்கினார்.

Read more Photos on
click me!

Recommended Stories