IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!

Published : Jul 02, 2026, 02:48 PM IST

IND vs ENG T20: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஹர்சித் ராணாவுக்காக மூத்த ஸ்டார் வீரரை அசிங்கப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யபப்ட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி அரைசதங்களால் 189 ரன்கள் குவித்தது. பின்பு தொடர்ந்து கனமழை பெய்ததால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடியாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெஞ்சில் உட்கார வைக்கபப்ட்டுள்ள வைபவ் சூர்யவன்ஷியை விட, மூத்த ஸ்டார் கிரிக்கெட் வீரருக்குத்தான் அநீதி இழைக்கப்பட்டதாக ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த அந்த வீரரை பெஞ்சில் உட்கார வைத்தது ஏன்? அந்த வீரர் யார்? என்பதை பார்ப்போம். அதாவது இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த ஒரு வீரருக்குப் பதிலாக, இன்னொருவரை களமிறக்கிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த டிரெஸ்ஸிங் ரூம் அரசியல் குறித்து புதிய யூகங்கள் கிளம்பியுள்ளன.

24
அக்சர் படேலுக்கு முன் வந்த ஹர்சித் ராணா

கௌதம் கம்பீரின் இந்த முடிவு, அணிக்குள் இருக்கும் சமன்பாடுகள் குறித்த புதிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக சில கிரிக்கெட் வல்லுநர்கள் நம்புகின்றனர். பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட அந்த வீரர் வேறு யாருமல்ல, ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்தான். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அக்சர் போன்ற அனுபவமிக்க வீரரை ஃபினிஷராக களமிறக்குவதுதான் வழக்கம். ஆனால், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், நேற்றைய போட்டியில் 7-வது இடத்தில் அக்சருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணாவை களமிறக்கினர். ஹர்சித் ராணவும் டக் அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் சென்றார்.

34
வைபவ் சூர்யவன்ஷியை விட அநீதி

ஐபிஎல்-லில் KKR அணிக்காக விளையாடிய ஹர்ஷித், கம்பீரின் செல்லப்பிள்ளை என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்ததா? என்ற பேச்சும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட்டின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆனால், அவரை விட அக்சர் படேலுக்குத்தான் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டுக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்த ஒரு சீனியர் ஆல்-ரவுண்டரை இப்படிப் புறக்கணித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

44
கவுதம் கம்பீருக்கு கடும் எதிர்ப்பு

போட்டி தொடங்கியதிலிருந்தே கம்பீர் எடுக்கும் முடிவுகள் குறித்து கிரிக்கெட் ஆய்வாளர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அந்த நேரத்தில் ராணாவை முதலில் களமிறக்கியது சரியான முடிவு அல்ல என்பது சில மூத்த கிரிக்கெட் வீரர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு டி20 ஃபார்மெட்டில் அனுபவம் குறைவு. மேலும், சர்வதேச அளவில் அவர் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் வாதம்.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், கம்பீரின் வியூகம் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக, டீம் இந்தியாவின் நிர்வாகம் இந்த பேட்டிங் ஆர்டர் சர்ச்சையை எப்படி கையாளப் போகிறது? அக்சர் படேலுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories