IND vs ENG 2nd T20: ஜூலை 4 ஆம் தேதி நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் நீக்கப்படுகிறார். இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குகிறார். இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.
இந்தியா, இங்கிலாந்து முதல் டி20 போட்டி மழையால் ரத்து
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்பட்டது. செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். பின்பு அங்கு பலத்த மழை பெய்ததால் இங்கிலாந்து அணியால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
25
சஞ்சு சாம்சன் மீண்டும் மீண்டும் சொதப்பல்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்க ஸ்டார் விரர் உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்பினார். வெறும் 7 ப்ந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஏற்கெனவே அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் மொத்தம் 5 ரன்கள் மட்டுமே எடுத்த சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இதிலும் அவர் மோசமாக விளையாடி அவுட் ஆகியுள்ளார். சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதமும் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
கொஞ்சம் கூட காலை நகர்த்தாமல் ஆடும் அவர் பிட்ச்சின் தன்மையை கணிக்காமல் எளிதில் இன்சைட் எட்ஜில் போல்டாவதும், கேட்ச் ஆவதுமாக தனது விக்கெட்டை தாரை வார்த்து விடுகிறார். 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான 3 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் தவிர சஞ்சு சாம்சன் டி20 போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதே உண்மை.
இந்த 3 அரை சதங்களை தவிர்த்து பார்த்தால் கடைசி 15 இன்னிங்ஸ்களில் அவர் ஒருமுறை கூட 50 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என திறமையான இளம் வீரர்கள் பலர் காத்துக் கிடக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி விட்டு, ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணியில் இடம்பிடிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
35
2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கம்
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி ஜூலை 4 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சஞ்சு சாம்சனை குறைந்தபட்சம் ஒரு போட்டியில் வெளியில் உட்கார வைத்து விட்டு இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாற்றம் நிகழ்ந்தால் அபிஷேக் சர்மாவுடன் 15 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி ஓப்பனிங்கில் களமிறங்குவார். இதேபோல் இளம் வீரர் இஷான் கிஷன் பேட்டிங்கும் அயர்லாந்து தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சரியில்லை. நேற்றைய போட்டியில் இஷான் கிஷன் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஆனால் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுவதால் இந்திய அணியில் ஒரே மாற்றமாக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
55
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.