இந்த ஆண்டின் (2026) 'TIME 100 Next' பட்டியலில் உலகளவில் விளையாட்டுத் துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 வீரர்களில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளளார். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர் இவரே ஆவார்!
'பினோம்' பிரிவில் வைபவுக்கு இடம்
டைம் பத்திரிகை வைபவ் சூர்யவன்ஷியை 'பினோம்' (Phenom) பிரிவில் சேர்த்துள்ளது. விளையாட்டு உலகில் இருந்து இந்த கௌரவமான பட்டியலில் இடம்பிடித்த ஏழு விளையாட்டு வீரர்களில் வைபவும் ஒருவர். இந்தப் பட்டியலில் உள்ள மற்ற முக்கிய விளையாட்டு வீரர்கள்: ஆர்ச் மேனிங் (அமெரிக்கன் கால்பந்து குவாட்டர்பேக்), டைரீஸ் மேக்ஸி (NBA கூடைப்பந்து வீரர்), நவோமி கிர்மா (மகளிர் கால்பந்து வீராங்கனை), ஃபோலரின் பாலோகுன் (கால்பந்து ஸ்ட்ரைக்கர்), அலெக்ஸாண்ட்ரா ஈலா (டென்னிஸ் வீராங்கனை) மற்றும் ஒலிவியா மைல்ஸ் (கூடைப்பந்து வீராங்கனை).