Asian Games 2026: ஆசிய விளையாட்டு போட்டியின் அரையிறுதியில் இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கெத்தாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இலங்கையை ஊதித்தள்ளி பைனலுக்குள் நுழைந்துள்ளது. இஷான் கிஷனின் அதிரடி பேட்டிங் மற்றும் பவுலர்களின் கூட்டு முயற்சியால், அண்டை நாடான இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஈஸியாக வீழ்த்தியது. அக்டோபர் 3ஆம் தேதி நடக்கவுள்ள பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளப் போகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவது இதுதான் முதல் முறை.
25
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்கம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தலா 7 ரன்களில் அவுட் ஆகினர். வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் அதிரடியாக 38 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் எந்த பதற்றமும் இல்லாமல் இஷான் கிஷன் அதிரடியாக பேட் செய்து அரைசதம் விளாசினார்.
35
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்
இதனால் அணி சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி குறைந்த ஸ்கோரில் சுருண்டுவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் வெறும் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் மிரட்டினார்
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஓவரிலேயே ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆரம்பத்திலேயே இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இந்திய பவுலர்களின் தாக்குதல் எந்த அளவுக்கு மிரட்டலாக இருந்தது என்றால், வெறும் 5 ஓவர்கள் முடிவதற்குள் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 6 பேர் பெவிலியன் திரும்பிவிட்டனர். இலங்கை அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனும் பொறுப்பாக விளையாடவில்லை.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சினெத் ஜெயவர்தனே, லசித் குரூஸ்புள்ளே மற்றும் விக்கெட் கீப்பர் சோஹன் டி லிவேரா ஆகிய மூவரும் டக் அவுட்டாகி பெவிலியன் பரேட் நடத்தினர். அதேபோல, ஆஷென் பண்டாரா மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோரும் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாகி நடையைக் கட்டினர். இலங்கை அணியில் நுவானிது பெர்னாண்டோ (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.
55
பைனலில் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்
இந்திய அணி தரப்பில் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளினார். அபிஷேக் சர்மா வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசி 2 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். வாஷிங்டன் சுந்தரும் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், பைனலில் தங்கப் பதக்கத்துக்காக அக்டோபர் 3ஆம் தேதி மோதவுள்ளன. ஒருவேளை மழையால் பைனல் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரண்டு அணிகளும் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.