வைபவ் சூர்யவன்ஷியை யாருக்குத் தெரியாது? ஐபிஎல்-இல் அதிரடி காட்டி, இந்திய அணிக்கும் தேர்வாகிவிட்டார். இப்போது, அவர் டீம் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே, அவரது 10 வயது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷி சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
நடந்து முடிந்த 19-வது ஐபிஎல் சீசனில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது அபாரமான பேட்டிங்கால் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஆரஞ்சு கேப், டாடா சியாரா கார் என பல விருதுகளையும் தட்டிச்சென்றார்.
26
இந்திய அணியில் இளம் வீரர் வைபவ்
ஐபிஎஸ் தொடரில் வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டத்தால் பிசிசிஐ தேர்வுக் குழு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அவரை தேர்வு செய்தது. இதன்மூலம், இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
36
அசத்தல் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் சகோதரர்
வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு அறிமுகமாகும் முன்பே, அவரது 10 வயது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷி உள்ளூர் போட்டியில் சதம் அடித்து கவனம் ஈர்த்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் சமஸ்திபூரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஆசிர்வாத் சூர்யவன்ஷி வெறும் 87 பந்துகளைச் சந்தித்து, 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 103 ரன்கள் குவித்தார். தம்பியின் இந்த ஆட்டத்திற்கு அண்ணன் வைபவ் சூர்யவன்ஷி பாராட்டு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
56
சதம் அடித்து கொண்டாட்டத்தில் ஆசிர்வாத் சூர்யவன்ஷி
அண்ணனை போலவே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது ஆசிர்வாத் சூர்யவன்ஷியின் கனவு. இவரது சதத்தின் உதவியுடன், தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணி 29.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. சதம் அடித்ததும், ஹெல்மெட்டையும் பேட்டையும் உயர்த்திப் பிடித்து ஆசிர்வாத் கொண்டாடினார்.
66
ஆசிர்வாத் சூர்யவன்ஷியின் வீட்டில் கொண்டாட்டம்
ஆசிர்வாத் சூர்யவன்ஷியின் முதல் சதம் குறித்து, அவரது மற்றொரு அண்ணன் உஜ்வல் சூர்யவன்ஷி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். தற்போது வைபவ் சூர்யவன்ஷி, இந்திய 'ஏ' அணிக்காக முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ளார். இதனால், சூர்யவன்ஷி வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது.