அம்பயர் செய்த தவறால் தோற்ற பஞ்சாப்..! சேவாக் செம கடுப்பு

First Published Sep 21, 2020, 2:19 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அம்பயர் செய்த தவறால் பஞ்சாப் தோல்வியடைய நேர்ந்தது.
 

ஐபிஎல் 13வது சீசனின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ராகுல், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, பிரித்வி ஷா, தவான், ஹெட்மயர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் 13 ரன்களுக்கே இழந்துவிட்டாலும், அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின்(20 பந்தில் அரைசதம்) கடைசி நேர காட்டடியாலும் 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது.
undefined
158 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் மட்டும் தனி ஒருவனாக போராடி 89 ரன்களை குவித்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துவந்தார். ஆனால், போட்டி டை ஆன நிலையில் ஒரு ரன் அடித்து வெற்றியை தேடிக்கொடுக்காமல் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டாக, கடைசி பந்தில் ஜோர்டானும் அவுட்டாக போட்டி டையில் முடிந்தது.
undefined
இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சூப்பர் ஓவரில் அதிகபட்சம் 2விக்கெட்டுகள் மட்டுமே என்பதால், ரபாடா அந்த 2 விக்கெட்டையும் வீழ்த்திவிட்டதால், டெல்லி அணிக்கு 3 ரன்கள் என்ற எளிய இலக்கு சூப்பர் ஓவரில் நிர்ணயிக்கப்பட்டது. அதை அடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
undefined
இந்த போட்டியில், பஞ்சாப் அணி இலக்கை விரட்டும்போது, 19வது ஓவரின் 3வது பந்தில் மயன்க் அகர்வால் அடித்த ஒரு ஷாட்டுக்கு, 2 ரன்கள் ஓடப்பட்டன. ஆனால் கள நடுவர், கிறிஸ் ஜோர்டான் க்ரீஸுக்குள் பேட்டை வைக்கவில்லை என்று கூறி, அதற்கு ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். ஆனால், ஜோர்டான் பேட்டை க்ரீஸுக்குள் சரியாக வைத்துவிட்டுத்தான் ஓடினார் என்பது பின்னர் வீடியோ ஆதாரமாக தெரியவந்தது. எனவே அந்த ஒரு ரன் குறைக்கப்படாவிட்டால், நேற்று பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும்.
undefined
இதுமாதிரியான மிகவும் இக்கட்டான, சர்ச்சைக்குரிய விஷயங்களில் டிவி அம்பயரின் உதவியையோ டெக்னாலஜியின் உதவியையோ கள நடுவர் நாடாததை சேவாக், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
undefined
click me!