குறி வச்சா இரை விழனும் - காவல் துறையில் கலக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?

First Published | Oct 12, 2024, 8:48 PM IST

Top 3 Indian Cricketers are Deputy Superintendent of Police: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் அரசு வேலை கொடுக்கப்படுகிறது. ஜோகிந்தர் சர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் காவல் துறையில் சேர்ந்துள்ளனர்.

Joginder Sharma, Deputy Superintendent of Police, Haryana

Top 3 Indian Cricketers are Deputy Superintendent of Police: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது அனைவரது கவனம் ஈர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் கிரிக்கெட் வாழ்க்கையைத் தவிர தொழில் வாழ்க்கை தான். ஏனென்றால், கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் அரசு வேலை கொடுக்கப்படுகிறது. பல திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு மதிப்புமிக்க பதவிகளை வழங்கி கவுரவித்துள்ளது. அப்படிப்பட்ட அரசாங்க அதிகாரிகளான கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

Joginder Sharma, Deputy Superintendent of Police, Haryana

கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க ரொம்பவே கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் தொழில் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது அவர்களது வாழ்க்கை குறைவாக உள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும். அப்படியில்லாமல் இருக்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போதே அரசு வேலை அதாவது காவல் துறையில் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஜோகிந்தர் சர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tap to resize

Joginder Sharma, Deputy Superintendent of Police, Haryana

ஜோகிந்தர் சர்மா:

இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணம் ஜோகிந்தர் சர்மா தான். 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா தான் வீசினார். இதில் கடைசியாக மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலமாக இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. மேலும், 24 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணி ஐசிசி டிராபியை கைப்பற்றியது. அதற்கு முன்னதாக 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

Joginder Sharma, Deputy Superintendent of Police, Haryana

டி20 உலகக் கோப்பையில் அவர் செய்த சாதனைகளுக்குப் பிறகு ஹரியானா காவல்துறையால் கௌரவிக்கப்பட்ட ஜோகிந்தர் சர்மாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி வழங்கப்பட்டது. தற்போது துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Harbhajan Singh, Deputy Superintendent of Police, Punjab

ஹர்பஜன் சிங்:

இந்திய அணியின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இதுவரையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 236 போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடினார். 2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸிற்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். அந்த தொடரில் சிஎஸ்கே டிராபியை கைப்பற்றியது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

Mohammed Siraj, Deputy Superintendent of Police, Telangana

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தெலுங்கானாவில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) முன்னிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) அதிகாரப்பூர்வமாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தான் இன்று அதிகாரப்பூர்மாக காக்கி உடையில் துணை காவல் கண்காணிப்பாளராக தனது வேலையை தொடங்கினார். 

மேலும், இதற்கு முன்னதாக துணை காவல் கணிப்பாளரான ஜோகிந்தர் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரது வரிசையில் 3ஆவது இந்திய வீரராக முகமது சிராஜ் துணை காவல் கண்காணிப்பாளராக இணைந்துள்ளார். முகமது சிராஜ், ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!