
1. பிரையன் லாரா (400 ரன்கள்)
Top 10 Highest Individual Scores in Test Cricket: டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகளில் லாராவுக்கு இணை யாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனையை லாரா வைத்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு ஆன்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வரலாற்றில் இடம் பிடித்தார். இந்த சிறப்பான இன்னிங்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 751/5 என டிக்ளேர் செய்ய உதவியது. இதுவரை எந்த வீரரும் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை.
2. மேத்யூ ஹைடன் (380 ரன்கள்)
பிரையன் லாராவின் 400 ரன்கள் சாதனைக்கு முன்பு, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனையைப் படைத்தார். பெர்த்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹைடன் 380 ரன்கள் குவித்தார். வெறும் 437 பந்துகளில் 38 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் அடித்து ரன் மழை பொழிந்தார்.
3. மஹேல ஜெயவர்தனே (374 ரன்கள்)
2006 ஆம் ஆண்டு கொலம்போவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்தனே சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடினார். ஜெயவர்தனே அற்புதமான பேட்டிங்கால் 374 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் ஜெயவர்தனே 43 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார்.
4. சர் கார்பீல்ட் சோபர்ஸ் (365 ரன்கள்)
பிரையன் லாராவுக்கு முன்பு, மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் அதிக டெஸ்ட் ஸ்கோர் சாதனையைப் படைத்தார். 1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சோபர்ஸ் 365 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெறும் 21 வயதிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்தார். லாரா இந்த சாதனையை முறியடிக்கும் வரை 36 ஆண்டுகள் சோபர்ஸின் பெயரில் இந்த சாதனை நீடித்தது.
5. லென் ஹட்டன் (364 ரன்கள்)
1938 ஆம் ஆண்டு தி ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் சர் லென் ஹட்டன் எடுத்த 364 ரன்கள் இன்றும் டெஸ்ட் வரலாற்றில் மிகச் சிறந்த நாக் அவுட்களில் ஒன்றாகும். ஹட்டனின் இன்னிங்ஸ் 847 பந்துகளில் இருந்தது. அபரிமிதமான பொறுமை மற்றும் உறுதியைக் காட்டியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 579 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
6. சனத் ஜெயசூர்யா (340 ரன்கள்)
இலங்கையின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா வரையறுக்கப்பட்ட ஓவர்களில் ஒரு சிறந்த வீரராகப் பெயர் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அற்புதங்களைச் செய்தார். 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அவர் எடுத்த 340 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். அவரது நாக் 578 பந்துகளில் வந்தது.
ஜெயசூர்யா தனது இன்னிங்ஸில் 36 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இந்தப் போட்டியில் ஜெயசூர்யாவின் சூப்பர் இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இன்னிங்ஸ் ஸ்கோரை (952/6 டிக்ளேர்) இலங்கை எடுத்தது.
7. ஹனிஃப் முகமது (337 ரன்கள்)
1958 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 337 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் பேட்டிங் ஜாம்பவான் ஹனிஃப் முகமதுவின் இன்னிங்ஸ் டெஸ்ட் வரலாற்றில் மிகவும் அசாதாரணமான இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். 16 மணி நேரத்துக்கும் மேலாக கிரீஸில் பேட் செய்த ஹனிஃப் மாரத்தான் நாக் நீண்ட இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.
8. டபிள்யூ.ஆர். ஹம்மண்ட் (336* ரன்கள்)
இங்கிலாந்தின் வால்டர் ரெஜினால்ட் ஹம்மண்ட் 1933 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சூப்பர் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் ஹம்மண்ட் 34 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடித்தார். அவரது இன்னிங்ஸால் இங்கிலாந்து அணி 548/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
9. டேவிட் வார்னர் (335* ரன்கள்)
ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன், அதிரடி இன்னிங்ஸ்களுக்கு பெயர் பெற்ற டேவிட் வார்னர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். அதில் 2019 ஆம் ஆண்டு அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வார்னர் 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 39 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார். வார்னரின் சூப்பர் இன்னிங்ஸால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10. மார்க் டெய்லர்
ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் மார்க் டெய்லர் அதிக தனிநபர் ஸ்கோர் எடுத்த டாப்-10 வீரர்களில் ஒருவர். முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரராக அங்கீகரிக்கப்பட்ட மார்க் டெய்லர், பெஷாவரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 334* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 32 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார்.