பெங்களூரு அணியைப் பொறுத்த வரையில் விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் விராட் கோலி 82 (நாட் அவுட்), 21, 61, 50, 6, 59 என்று மொத்தமாக 279 சேர்த்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.