
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்த இலங்கை 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றியோடு 2023 ஆம் ஆண்டை தொடங்கியது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: 2-1 என்று இந்தியா வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 3-0 என்று கைப்பற்றியது.
ஜனவரி – பிப்ரவரியில் நியூசிலாந்து தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 2-1 என்று ஒருநாள் தொடரையும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்றும் கைப்பற்றியது.
பிப்ரவரி – மார்ச்சில் ஆஸ்திரேலியா டெஸ்ட்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றியது. ஆனால், ஒருநாள் தொடரை 1-2 என்று இழந்தது.
ஐபிஎல் 2023;
மார்ச் 31 முதல் மே 28 ஆம் தேதி வரையில் இந்தியாவில் 16ஆவது ஐபிஎல் தொடர் நடந்தது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023: (ஜூன் 7 -11)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா டூர் ஆஃப் வெஸ்ட் இண்டீஸ்: (அவே) – ஜூலை, ஆகஸ்ட்
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது. ஆனால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-3 என்று இந்தியா இழந்தது.
இந்தியா டூர் ஆஃப் அயர்லாந்து (அவே) – ஆகஸ்ட் 2023
ஆகஸ்ட் மாதம் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்திற்கு சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஆசிய கோப்பை 2023 (அவே)
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி டிராபியை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா – செப்டம்பர்
செப்டம்பர் இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 2-1 என்று தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 – அக்டோபர் – நவம்பர்
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. ஆனால், அதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா – நவம்பர் – டிசம்பர்
மூன்றாவது முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா 4-1 என்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா டூர் ஆஃப் தென் ஆப்பிரிக்கா – டிசம்பர் – ஜனவரி 2024
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், 1-1 என்று டி20 தொடரை சமன் செய்தது. அதோடு, 2-1 என்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆனால், நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்த ஆண்டை தோல்வியோடு நிறைவு செய்துள்ளது.
டி20 போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா வெற்றியோடு நிறைவு செய்துள்ளது.
ஒருநாள் போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்து வெற்றியோடு முடித்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்து தோல்வியோடு முடித்துள்ளது.