Lowest totals in India in Tests
India vs New Zealand Test Cricket: இந்தியாவிற்கு எதிரான பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஒட்டு மொத்த ரசிகர்கள் முன்னாடியும் இந்திய அணியின் இமேஜை நியூசிலாந்து காலி செய்துள்ளது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் டாஸ் உடன் தொடங்கியது.
Lowest totals for India in Tests
இதில் ரோகித் சர்மா டாஸ் ஜெய்ச்சு பேட்டிங் தேர்வு செய்தார். நேற்று முழுவதும் மழை பெய்திருந்த நிலையில், ரோகித் சர்மா பேட்டிங் எடுத்திருக்க கூடாது என்று அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. பின்னர் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்கம் முதலே நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க தடுமாறிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
Most ducks in a Test innings for India
நியூசிலாந்து அணியில் 3 பவுலர்கள் மட்டுமே பந்து வீசினர். இதில், மேட் ஹென்றி மட்டுமே 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வில்லியம் ஓ ரூர்கே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிம் சவுதி ஓவரில் ரோகித் சர்மா கிளீன் போல்டானார். விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தனர்.
India vs New Zealand
இந்திய அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேட்ஸ்மேன்கள் வரிசையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறியது இதுவே முதல் முறை. ரிஷப் பண்ட் மட்டுமே நிதானமாக விளையாடி 20 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்தார். கடைசியாக முகமது சிராஜ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தார்.
India vs New Zealand, Test Cricket
இந்திய அணி 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 46 ரன்களுக்கு சரண்டரானது. ஆர்சிபியின் கோட்டை என்று சொல்லப்படும் பெங்களூருவில் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள் மத்தியில் நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசியதோடு, பீல்டிங்கிலும் கலக்கி தனது கெத்தை காட்டியுள்ளது.
India vs New Zealand
இந்த போட்டியில் இந்திய அணி படைத்த மோசமான சாதனைகள்:
இந்தியாவுக்காக அதிக முறை டக் அவுட்:
6 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 2014 (1st இன்னிங்ஸ்)
6 vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2024 (2nd இன்னிங்ஸ்)
5 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 1948 (3rd இன்னிங்ஸ்)
5 vs இங்கிலாந்து, லீட்ஸ், 1952 (3rd இன்னிங்ஸ்)
5 vs நியூசிலாந்து, மொஹாலி, 1999 (1st இன்னிங்ஸ்)
5 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024 (1st இன்னிங்ஸ்)*
India vs New Zealand
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோர்:
46 ரன்கள் - இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
62 ரன்கள் – நியூசிலாந்து v இந்தியா, மும்பை, 2021
75 ரன்கள் - இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987
76 ரன்கள் – இந்தியா v தென் ஆப்பிரிக்கா, அகமதாபாத், 2008
79 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா v இந்தியா, நாக்பூர், 2015
India vs New Zealand
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு மிகக் குறைந்த ஸ்கோர்:
36 vs ஆஸ்திரேலியா, அடிலெய்டு, 2020
42 vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1974
46 vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
58 vs ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன், 1947
58 vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 1952