
New Zealand Lost 12 Test Series in India: இந்தியா மீது 17 முறை படையெடுத்த முகமது கஜினி மாதிரி நியூசிலாந்து அணியானது 12 முறை இந்தியாவிற்கு வந்து தோல்வியோடு நாட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளது. தற்போது 13 ஆவது முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளது. 1988 ஆம் ஆண்டு வான்கடேயில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா வந்த நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில், 2 போட்டியிலும் தோல்வியோடு நாடு திரும்பியது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. டாஸ் கூட போடவில்லை.
இதையடுத்து, 2ஆவது நாள் போட்டி இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி மோசமான சாதனை படைத்தது. 3ஆவது முறையாக இந்திய அணி குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. அதாவது இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் மட்டுமே அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற முகமது சிராஜ் மட்டுமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இந்த இன்னிங்ஸில் பவுண்டரி அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி, சர்ஃபராஸ் கான் இருவரும் 0 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது வரிசையில் களமிறங்கிய விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
விராட் கோலி டக் அவுட்
கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 33 ஆவது இன்னிங்ஸில் இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே தலா 6 பந்துகள் நின்று ஒரு ரன் கூட அடிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். ரவிச்சந்திரன் அஸ்வின் கோல்டன் டக்கில் நடையை கட்டினார். கடைசியாக குல்தீப் யாதவ் 2, பும்ரா 1 மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13, ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுக்கவே இந்தியா 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலமாக இந்தியா 3ஆவது முறையாக குறைவான ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இது தான் இந்திய அணியின் மிக குறைவான ஸ்கோர் ஆகும். இதே போன்று 1974 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்க்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்தது.
1947 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் ஆஸிக்கு எதிராக 58 ரன்களில் நடையை கட்டியது. இதே போன்று 1952 ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 58 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதுவே ஹோம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 50 ரன்களுக்கும் குறைவாக 46 ரன்களுக்கு சுருண்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிக்கு எதிராக 62 ரன்களில் சுருண்டது.
இந்திய அணியின் குறைவான ஸ்கோர்:
46 ரன்கள் - இந்தியா vs நியூசிலாந்து, பெங்களூரு, 2024*
62 ரன்கள் – நியூசிலாந்து v இந்தியா, மும்பை, 2021
75 ரன்கள் - இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், டெல்லி, 1987
76 ரன்கள் – இந்தியா v தென் ஆப்பிரிக்கா, அகமதாபாத், 2008
79 ரன்கள் – தென் ஆப்பிரிக்கா v இந்தியா, நாக்பூர், 2015