India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட பலர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
India vs New Zealand Test Cricket: முகமது கஜினி மாதிரி நியூசிலாந்து அணி இந்தியாவில் 12 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. கடைசியாக கடந்த 1988 ஆம் ஆண்டு இந்தியா வந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து.
210
IND vs NZ Test, M Chinnaswamy Stadium
13ஆவது முயற்சியில் வெற்றி கிடைக்குமா?
கிட்டத்தட்ட 12 முயற்சிகளுக்கு பிறகு தற்போது 13 ஆவது முயற்சியாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஆவலோடு இந்தியா வந்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை சென்ற நியூசிலாந்து 2 போட்டியிலும் தோல்வி அடைந்து தற்போது இந்தியா வந்திருக்கிறது. இந்தியாவும், வங்கதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி நம்பிக்கையோடு நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
310
IND vs NZ 1st Test, Day 2
இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட்ரின் முதல் போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் பெய்த மழையின் காரணமாக முதல் நாளில் டாஸ் கூட போட முடியாத நிலையில் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.
410
India vs New Zealand 2nd Day First Test
இதன் காரணமாக இன்றைய 2ஆவது போட்டி 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துவிட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
510
Test Cricket, IND vs NZ 1st Test Day 2
ரோகித் சர்மா 2 ரன்:
வழக்கம் போல் இந்த முறையும் ரோகித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 1 ரன் எடுத்திருந்த போது நடுவரின் எல்பிடபிள்யூ அப்பீலுக்கு அம்பயர்ஸ் கால் முறையில் தப்பித்து 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது வரிசையில் களமிறங்கிய விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
610
IND vs NZ Test Cricket
விராட் கோலி டக் அவுட்
கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 33 ஆவது இன்னிங்ஸில் இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2ஆவது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
710
IND vs NZ Test
விராட் கோலியைத் தொடர்ந்து சர்ஃபராஸ் கானும் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து திணறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு வந்த கேஎல் ராகுல் 0, ரவீந்திர ஜடேஜா 0, ரவிச்சந்திரன் அஸ்வின் 0 என்று ஒவ்வொருவரும் டக் அவுட்டிலேயே ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக இந்திய அணியில் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர்.
810
India vs New Zealand 1st Test
ஹோம் டெஸ்ட்டில் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 4 பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக 2 முறை இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் ஆட்டமிழந்திருக்கின்றனர். ஆனால், இங்கிலாந்தில் ஹெடிங்கிலியில் 1952 ஆம் ஆண்டு டாப் 4 பேட்ஸ்மேன்கள் 0 ரன்னில் ஆட்டமிழந்ததே முதல் நிகழ்வாக இருந்துள்ளது.
910
India vs New Zealand 1st Test
நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 20 ரன்னில் ஆட்டமிழக்க, ஜஸ்ப்ரித் பும்ரா 1 ரன்னில் நடையை கட்டினார். இறுதியாக இந்தியா 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது.
1010
India vs New Zealand
நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மேட் ஹென்றி 13.2 ஓவர்களில் 3 மெய்டன் உள்பட 15 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிம் சவுதி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.