நியூசிக்கு எதிராக பெங்களூரு டெஸ்டில் இந்திய வீரர்கள் முறியடிக்கக்கூடிய 5 சாதனைகள் என்னென்ன தெரியுமா?

First Published | Oct 16, 2024, 7:25 PM IST

Indian Players will Break 5 Records in Bengaluru Test against New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் முக்கிய சாதனைகளை முறியடிக்க உள்ளனர்.

India vs New Zealand 1st Test

5 Records Indian Cricketers Can break in Bengaluru Test against New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால். முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது.

India vs New Zealand Test Cricket

ஆனால், மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாமல் முதல் போட்டியானது ரத்து செய்யப்பட்டது. எனினும், பெங்களூரு டெஸ்டில் இந்திய அணிக்கு வரலாறு படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெங்களூர் டெஸ்டில் இந்திய வீரர்கள் முறியடிக்கக்கூடிய 5 சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.

Latest Videos


Ravichandran Ashwin Most Times 5 Wickets

ரவிச்சந்திரன் அஸ்வின்:

வலது கை சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Ravichandran Ashwin One more 5 Wickets

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னேயின் சாதனையை முறியடிப்பார். இதற்கு முன்னர் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Ravichandran Ashwin 3 Wickets WTC

இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால், நாதன் லயன் சாதனையை முறியடிப்பார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார். 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Ravichandran Ashwin 3 Wickets

லயன் சாதனையை முறியடிக்க அஸ்வின் பெங்களூர் டெஸ்டில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த வேண்டும். அஸ்வின் இதுவரை 37 போட்டிகளில் விளையாடி 185 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yashasvi Jaiswal 1000 Runs

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை:

இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனையை இவர் படைக்க உள்ளார். இதுவரையில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 929 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 71 ரன்கள் எடுத்தால் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Virat Kohli Reach 9000 Runs

விராட் கோலி:

இதுவரை பல டெஸ்ட் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். இந்தப் போட்டியிலும் ஒரு சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 9000 ரன்களை கடக்க வாய்ப்பு உள்ளது. இதுவரையில் 115 போட்டிகளில் விளையாடிய கோலி 8947 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் கோலி 53 ரன்கள் எடுத்தால் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

Rohit Sharma and Virender Sehwag

ரோகித் சர்மா:

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் விரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 61 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா தற்போது வரையில் 87 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்தால் சேவாக்கின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!