#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்தை எதிர்கொள்ளும் உத்தேச இந்திய அணி

First Published Jun 17, 2021, 3:28 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் உத்தேச இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், ஃபைனலில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
undefined
இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கும். அந்தவகையில் விக்கெட் கீப்பருடன் சேர்த்து 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ரோஹித், ஷுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகிய ஆறு பேரும் பேட்ஸ்மேன்கள். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்.
undefined
ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவருமே ஃபைனலில் ஆடுவார்கள். ஜடேஜா, அஷ்வின் ஆகிய 2 ஸ்பின்னர்களுமே ஆடுவதன்மூலம், பவுலிங் வலுப்படுவது மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் நல்ல டெப்த் கிடைக்கும். எனவே ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவருமே ஆடுவார்கள்.
undefined
ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா ஆகிய மூவரும் ஆடுவார்கள். சிராஜுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
undefined
உத்தேச இந்திய அணி:ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.
undefined
click me!