ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நாளை மறுநாள்(18ம் தேதி) தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த 2 மிகச்சிரந்த அணிகள் மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடா, தெலுங்கு ஆகிய 5 மொழி வர்ணனைகளுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்புகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான ஆங்கில வர்ணனையாளர்களை ஐசிசி இறுதி செய்து அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 9 வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 வர்ணனையாளர்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். குமார் சங்கக்கரா, நாசர் ஹுசைன், இஷா குகா, இயன் பிஷப், சைமன் டௌல், மைக்கேல் ஆதர்டான், கிரைக் மெக்மிலன் ஆகியோரும் வர்ணனை செய்யவுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான ஆங்கில வர்ணனையாளர்கள்:சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக், குமார் சங்கக்கரா, நாசர் ஹுசைன், சைமன் டௌல், இஷா குகா, இயன் பிஷப், மைக்கேல் ஆதர்டன், க்ரைக் மெக்மிலன்.