புனே டெஸ்டில் சரித்திரம் படைக்குமா இந்தியா – 359 ரன்கள் சேஸ், ரோகித் சர்மா 8க்கு அவுட்!

First Published | Oct 26, 2024, 11:42 AM IST

IND vs NZ 2nd Test: புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் இந்திய அணி இந்த இலக்கை எட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

IND vs NZ 2nd Test, Rohit Sharma

IND vs NZ 2nd Test: புனே டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிந்துவிடுமா? கிரிக்கெட் உலகில் இப்போது இந்த விவாதம் நடந்து வருகிறது. சனிக்கிழமை போட்டியின் மூன்றாவது நாள் முதல் செஷனிலேயே 255 ரன்களுக்கு நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. வெள்ளிக்கிழமை இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளுக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

New Zealand 255 Runs, Target 359 Runs

மூன்றாவது நாள் மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. 72 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தினார். 97 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Tap to resize

India vs New Zealand Test Series

இதனால் இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 359 ரன்கள் தேவை. பிட்ச்சில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கிறது. இதனால் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு வேலை மிகவும் கடினம். இந்த பிட்ச்சில் மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து 359 ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான காரியம்.

India vs New Zealand 2nd Test

இன்னும் 3 நாட்கள் எஞ்சிய நிலையில் இந்திய அணி 359 ரன்களை சேஸ் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுவரையில் இந்திய அணி 300+ ரன்களை ஒரு முறை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக 387 ரன்களை சேஸ் செய்து வென்றது.

மேலும், 14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிய ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெங்களூரு மைதானத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும். இல்லையென்றால் நியூசிலாந்து தான் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும்

India vs New Zealand 2nd Test, Pune

2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 3ஆவது நாள் உணவு இடைவேளை வரையில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 46 ரன்னுடனும், சுப்மன் கில் 22 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

Latest Videos

click me!