
India vs New Zealand 2nd Test, Water Shortage at Pune: புனே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 100மிலி வாட்டர் பாட்டிலானது ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான புனே டெஸ்ட் போட்டியில், மைதானத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்த அறிக்கை இங்கே.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் புனே மைதானத்தில், ரசிகர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். முதல் நாளான வியாழக்கிழமை சுமார் 18,000 ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். ஆனால், பெரும்பாலானோருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
புனே மைதானத்திற்கு மேற்கூரை இல்லை. எனவே, வெயிலில் அமர்ந்து போட்டியைப் பார்க்க வேண்டியிருந்தது. இந்நிலையில், ரசிகர்கள் தண்ணீருக்காக அலைமோதினர். ஸ்டாண்டில் தண்ணீர் கிடைக்காததால், மைதானத்தின் நீர் விநியோகப் பிரிவுக்கு ஓடினர். அங்கும் தண்ணீர் கிடைக்காததால், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தை (MCA) கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையில், விற்பனையாளர்கள் 100 மி.லி. பாட்டிலுக்கு ரூ.80 வசூலித்ததாக பலர் குற்றம் சாட்டினர்.
குழப்பம் மற்றும் ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, MCA மன்னிப்பு கேட்டது. மீதமுள்ள நாட்களில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தது.
531: அதிக விக்கெட்டுகளில் அஸ்வின் 7வது இடம்
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில், இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வியாழக்கிழமை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய 38 வயதான அஸ்வின், மொத்த விக்கெட்டுகளை 531 ஆக உயர்த்தினார்.
இதன் மூலம், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (530) விக்கெட்டுகளை முந்தினார். டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். 39 போட்டிகளில் 75 இன்னிங்ஸ் விளையாடி 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயனை அஸ்வின் முந்தினார்.
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் (முதல் 7)
வீரர் – போட்டிகள் - விக்கெட்டுகள்
முரளிதரன் - 133 - 800
ஷேன் வார்ன் - 145 - 708
ஆண்டர்சன் - 188 - 704
அனில் கும்ப்ளே - 132 - 619
ஸ்டூவர்ட் பிராட் - 167 - 604
மெக்ராத் - 124 - 563
அஸ்வின் - 104 - 531
புனே மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வாஷிங்டன் சுந்தரின் மாயாஜாலத்தால் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸை விளையாடி 156 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன் மூலமாக 103 ரன்கள் பின் தங்கியது. நியூசிலாந்தின் சுழல் பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
முதல் முறையாக இந்தப் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 103 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலமாக 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இது இந்திய அணிக்கு கடினமான இலக்கு தான்.
நியூசி அணியைப் பொறுத்த வரையில் கேப்டன் டாம் லாதம் (86), டெவோன் கான்வே (17), வில் யங் (23), ரச்சின் ரவீந்திரா (9) ஆகியோர் ஒரளவு எடுத்துக் கொடுத்தனர். டாம் பிளண்டல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இந்தியப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக நியூசிலாந்து பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியானது டிரா கூட ஆகவில்லை. நாளை 3ஆவது நாளில் நியுசிலாந்தை 230 ரன்களுக்குள் சுருட்டினால் ஒரு 330 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு கிடைக்கும். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி அந்த இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டும். அதற்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
ஓபனிங் இருவரும் பொறுப்புடன் விளையாடினால் இந்திய அணிக்கு ஸ்கோர் கிடைக்கும். அதன் பிறகு வரும் பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.