India vs New Zealand 2nd Test
Ravichandran Ashwin, Most Wickets in WTC: இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் ஆஷ்வின் வியாழக்கிழமை (அக்டோபர் 24) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 33 வயதான இவர், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்த சாதனையை படைத்தார்.
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் முடிவில் 186 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஷ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயானை முந்திச் செல்ல இன்னும் 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டன. வலது கை ஆஃப் சுழற்பந்து வீச்சாளர் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், வில் யங் மற்றும் டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
Most wickets For ICC World Test Championship, Ravichandran Ashwin
WTC தரவரிசையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் 5 பந்து வீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் (189), நாதன் லயான் (187), பேட் கம்மின்ஸ் (175), மிட்செல் ஸ்டார்க் (147) மற்றும் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (134) ஆகியோர் உள்ளனர். பட்டியலில் அடுத்த இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 124 விக்கெட்டுகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
Pune Test, Ravichandran Ashwin Create Records in WTC
புனே டெஸ்ட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், டெவோன் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியில் புனே டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
Ravichandran Ashwin, India vs New Zealand 2nd Test
டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் 3 விக்கெட்டை கைப்பற்றி திருப்பு முனையை ஏற்படுத்தினார். எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றி சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள கைப்பற்றினார்.
Ravichandran Ashwin, Most Wickets in WTC
3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வந்த வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளை கிளீன் போல்டு மூலமாக எடுத்தார். 2 விக்கெட்டுகளை எல்பிடபிள்யூ மூலம் எடுத்தார். நியூசிலாந்ந்து அணியைப் பொறுத்த வரையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தாலும் பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இதில், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்கள் சேர்த்தார். இறுதியாக நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். டிம் சவுதியின் அற்புதமாக பவுலிங்கில் ரோகித் சர்மா கிளீன் போல்டார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னுடனும், சுப்மன் கில் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.