#AUSvsIND கோலி கடைசி டெஸ்ட்டில் ஆடுவதையும் ஆடாததையும் தீர்மானிப்பது இதுதான்..!

First Published Nov 23, 2020, 2:40 PM IST

குவாரண்டின் கெடுபிடி இல்லையென்றால் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆட வாய்ப்புள்ளது. 
 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் 3 ஒருநாள் போட்டிகளும் அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகளும் கடைசியாக 4 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடும் இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார்.
undefined
விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், நாடு திரும்புகிறார். தோனி குழந்தை பிறந்தபோது, நாட்டுக்காக ஆடினார். ஆனால் கோலி நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்ததுடன், கோலி முழு தொடரிலும் ஆட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்தன.
undefined
கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமாக அமையும். கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் தான், கோலியால் இந்தியா வந்துவிட்டு உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியவில்லை. இந்தியா வந்துவிட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் 14 நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும். குவாரண்டின் சிக்கல் இல்லையென்றால், கோலியால் கடைசி டெஸ்ட்டில் ஆடமுடியும்.
undefined
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, குழந்தை பிறப்பு என்பது வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு. கோலி மிக முக்கியமான காரணத்திற்காக மட்டுமே விடுப்பு எடுக்கக்கூடியவர். குவாரண்டின் கெடுபிடி இல்லையென்றால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடலாம். வாழ்வா சாவா என்று போராடக்கூடிய கேப்டன் கோலி. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி வெற்றிகளை குவிக்கும் வேட்கை கொண்டவராக கோலி இருப்பதுதான், இந்திய அணியை வெற்றிகரமான ஆதிக்கம் செலுத்தும் அணியாக வைத்திருக்கிறது என்று சாஸ்திரி தெரிவித்தார்.
undefined
ஆனால் ஆஸ்திரேலியாவில் குவாரண்டின் கட்டுப்பாட்டுகள் மிகக்கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அதில் கோலிக்கு சலுகை கொடுக்கப்பட்டால், அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடமுடியும். அப்படியில்லை என்றால் கடைசி டெஸ்ட்டில் அவர் ஆட விரும்பினால் டிசம்பர் 31 அல்லது ஜனவரி ஒன்றாம் தேதி அவர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று குவாரண்டினில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் கடைசி டெஸ்ட்டில் ஆடமுடியும்.
undefined
click me!