டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு.. 2 ஆல்ரவுண்டர்கள் விலகல்!

Published : Feb 10, 2026, 11:17 PM IST

டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்படும் விதமாக இந்த அணிகளில் இருந்து தலா 1 ஆல்ரவுண்டர்கள் விலகியுள்ளனர். அவர்கள் யார்? என விரிவாக பார்ப்போம்.

PREV
டி20 உலகக்கோப்பை 2026

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் தனது இடது கணுக்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டதால், 2026 டி20 உலகக்கோப்பையின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல்லுக்குப் பதிலாக கோல் மெக்கோன்சியை ரிசர்வ் வீரராகச் சேர்க்க ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகல்

பிப்ரவரி 8 அன்று சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக யிற்சியில் ஈடுபட்ட பிரேஸ்வெல் காயமடைந்தார். கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கணுக்கால் தசைப்பிடிப்பில் இருந்து பிரேஸ்வெல் மீண்டு வந்தார். 

ஆனால் வார்ம்-அப் பயிற்சியின் போது மீண்டும் அதே தசையில் காயமடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்தே விலக நேரிட்டுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணிக்கும் பெரும் பின்னடைவு

நியூசிலாந்து தனது டி20 உலகக்கோப்பை பயணத்தை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இன்று (பிப்ரவரி 10) 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

 இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கும் மிகப்பெரும் பின்னடைவாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவும் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

வனிந்து ஹசரங்கா விலகல்

அதாவது அயர்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட இடது தொடை தசைநார் காயம் காரணமாக, இலங்கை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா டி20 உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

அயர்லாந்துக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற முக்கியப் பங்காற்றிய 28 வயதான ஹசரங்காவுக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் காயம் உறுதி செய்யப்பட்டது. ஹசரங்கா பல ஆண்டுகளாக காயங்களுடன் போராடி வருகிறார்.

மாற்று வீரர் யார்?

ஹசரங்காவுக்கு பதிலாக ஐசிசி இன்னும் மாற்று வீரருக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக சக லெக்-ஸ்பின் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

 31 வயதான ஹேமந்தா, இதுவரை இலங்கைக்காக ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி, 7.85 என்ற டி20 எகானமி விகிதத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories