சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில், இடம் பெற்றுள்ள 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் இடம் பெற்றவர் அஜின்க்யா ரஹானே.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
முதல் இரு போட்டிகளில் சென்னை அணியில் ரஹானே இடம் பெறவில்லை. அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அவருக்குப் பதிலாக மும்பையில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெற்று விளையாடினார்.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
இதில், தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரஹானே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். 5.3 ஓவரிலேயே சிஎஸ்கே அணிக்காக அதிவேகமாக 19 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 61, 31, 37, 71 (நாட் அவுட்), 9 என்று ரன்கள் சேர்த்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி அணி சார்பில் ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு மட்டும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
ஐபிஎல் சாதனையின் மூலமாக ரஹானே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
அதன் பிறகு கிட்டத்தட்ட ஒராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இது அவரது முதல் படிக்கட்டு தான். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
ஆனால், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் போட்டிகளில் காயம் காரணமாக இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றார். ஆனால், அவர் முதல் இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
இதைத் தொடர்ந்து 4 ஆவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட பாதியிலேயே அவர் வெளியேறினார். இதனால், ஒரு நாள் போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று விளையாடினார். 3 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
இதையடுத்து தொடங்கப்பட்ட ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15, 1, 0, 43, 7, 57 ரன்கள் என்று மொத்தமாக 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுவே ரஹானே 5 போட்டிகளில் விளையாடி 209 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் - அஜின்க்யா ரஹானே
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக ரஹானே இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.