ஆர்சிபி, குஜராத்தை கீழே இறக்க வாய்ப்பு: மும்பை இந்தியன்ஸ் இதை மட்டும் செய்தால் டாப் 4ல் இடம் பெறும்!

First Published | Apr 25, 2023, 4:20 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெறும்.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 35ஆவது போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் இன்று நடக்கிறது. 

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒரு அணியாக இடம் பெறும்.

Tap to resize

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 8 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திலும் உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

4ஆவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8, 8 புள்ளிகள் உடன் 5 மற்றும் 6ஆவது இடத்தில் உள்ளன. 7ஆவது மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

இந்த நிலையில், தான் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையிலும் புள்ளிகள் அடிப்படையிலும் 4ஆவது இடத்திற்கு முன்னேறுவதற்கான சாத்திக் கூறுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் மும்பை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

இதே போன்று, வரும் 29 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிற்து.

Latest Videos

click me!