பாம்புக்கு பால் வார்த்த ரிஷப் பண்ட் – 4 ஓவரில் 83 ரன்கள், ஆக்ரோஷமாக விளையாடிய ஹெட்!

First Published | Apr 20, 2024, 8:30 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 35ஆவது லீக் போட்டி தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்து பாம்புக்கு பால் வார்த்துள்ளார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளை துவம்சம் செய்துவிட்டு தற்போது டெல்லிக்கு வந்திருக்கின்றனர்.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

ஆகையால், டாஸ் ஜெயிச்ச டெல்லி முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். எனினும், ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்று அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்துள்ளனர். அதிரடி என்று கூட சொல்லக் கூடாது, ருத்ரதாண்டவம் என்று சொல்ல வேண்டும்.

Tap to resize

DC vs SRH,

அந்தளவிற்கு முதல் ஓவரில் 19 ரன்களும் 2ஆவது ஓவரில் 21 ரன்களும், 3ஆவது ஓவரில் 22 ரன்களும், 4ஆவது ஓவரில் 21 ரன்களும் என்று மொத்தமாக 83 ரன்கள் குவித்தனர். இதில், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

இதற்கு முன்னதாக ஹெட் 18 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இந்த நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 4 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்திருந்த ஹைதராபாத் அடுத்த 2 ஓவர்களில் முறையே, 20, 22 ரன்கள் என்று மொத்தமாக 125 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

அதிவேகமாக அரைசதம் அடித்த ஹைதராபாத் வீரர்கள்:

16 பந்துகள் – அபிஷேக் சர்மா vs மும்பை இந்தியன்ஸ், 2024

16 – டிராவிஸ் ஹெட் vs டெல்லி கேபிடஸ்ல், 35ஆவது லீக் போட்டி, டெல்லி

18 – டிராவிஸ் ஹெட் vs மும்பை இந்தியன்ஸ், 2024

20 – டேவிட் வார்னர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத், 2015

20 - டேவிட் வார்னர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், 2

DC vs SRH, Travis Head and Abhishek Sharma

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணி:

2.5 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2023

2.5 – கேஎல் ராகுல் vs டெல்லி கேபிடல்ஸ், 2018

3.0 – டிராவிஸ் ஹெட் vs டெல்லி கேபிடல்ஸ், 2024*

ஹைலைட்ஸ்:

முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்த சீசனில் முதல் 5 ஓவர்களில் முறையே 19, 21, 22, 21, 20 என்று மொத்தமாக 103 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

Delhi Capitals vs Sunrisers Hyderabad

அதிவேகமாக சதம் அடித்த ஐபிஎல் அணி (ஓவர்கள் எடுக்கப்பட்டது)

5 ஓவர்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், Delhi,

6 ஓவர்கள் - CSK vs PBKS, மும்பை, 2014

6 ஓவர்கள் - KKR vs RCB, பெங்களூரு, 2017

6.5 ஓவர்கள் - CSK vs MI, மும்பை, 2015

7 ஓவர்கள் - SRH vs MI, ஹைதராபாத், 2024

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th IPL Match

ஐபிஎல் கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி:

125/0 - SRH vs DC, 2024*

105/0 - KKR vs RCB, 2017

100/2 - CSK vs PBKS, 2014

90/0 - CSK vs MI, 2015

88/1 - KKR vs DC, 2024*

ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமின்றி, டி20 கிரிக்கெட்டிலும் பவர்பிளேயிலும் அதிகபட்சமாக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.

Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match

பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள்:

84 (26) – டிராவிஸ் ஹெட் vs டெல்லி கேபிடல்ஸ், Delhi, 2024

62*(25) – டேவிட் வார்னர் vs கொல்கத்தா நை ரைடர்ஸ், Hyderabad, 2019

59*(20) – டிராவிஸ் ஹெட் vs MI, ஹைதராபாத், 2024

59*(23) – டேவிட் வார்னர் vs CSK, Hyderabad, 2015

ஆனால், பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஏற்கனவே சுரேஷ் ரெய்னா 87 ரன்கள் குவித்து ஹெட்டிற்கு முன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

DC vs SRH, 35th IPL Mach

இந்தப் போட்டியில் 5ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட குல்தீப் யாதவ் 7ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மாவை அவுட்டாக்கி டெல்லியின் மகிழ்ச்சிக்கு வித்திட்டார். அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!