ஐபிஎல்லில் அறிமுகமான அதே நாளில் 17ஆவது சீசனில் விளையாடிய ஒரே ஜாம்பவான்!

First Published Apr 20, 2024, 1:44 PM IST

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான அதே நாளில் 17 ஆவது ஆண்டில் விளையாடிய ஜாம்பவான் என்ற பெருமையை சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி பெற்றுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. அந்த சீசனின் முதல் போட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. இதையடுத்து, ஏப்ரல் 19 ஆம் தேதி 2ஆவது போட்டி நடைபெற்றது.

இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் மூலமாக சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இது தான் அவரது முதல் ஐபிஎல் போட்டி. இதில், அவர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 207/4 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தான் அறிமுகமான அதே நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி சிஎஸ்கே அணியில் விளையாடி 28 ரன்கள் குவித்துள்ளார். தோனியை தவிர வேறு எந்த சிஎஸ்கே வீரரும் அறிமுகமான அதே நாளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

இதுவரையில் 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தோனி மொத்தமாக 5169 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் குவித்தது.

பின்னர் கடின இலக்கை துரத்திய கேஎல் ராகுல் மற்றும் குயீண்ட டி காக் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க சிஎஸ்கே மேற்கொண்ட எல்லா பிளானும் வீணானது. கடைசியாக முஷ்தாபிஜூர் ரஹ்மான் இந்த ஜோடியை பிரித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 134 ரன்கள் குவித்தது.

இதில், குயீண்டன் டி காக் 54 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் கேஎல் ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

click me!