மனைவிக்குப் பதிலாக வேறொருவருக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன ஆஸி, வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Published : Feb 15, 2023, 11:46 AM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மீத் ஸ்மித் தனது மனைவி டேனி வில்லீஸுக்கு பதிலாக வேறொரு பெண்ணிற்கு காதலர் தின வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

PREV
15
மனைவிக்குப் பதிலாக வேறொருவருக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன ஆஸி, வீரர் ஸ்டீவ் ஸ்மித்!
ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெற்றிருந்தார்.
 

25
ஸ்டீவ் ஸ்மித்

ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.
 

35
ஸ்டீவ் ஸ்மித்

இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் ஸ்மித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார். டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
 

45
ஸ்டீவ் ஸ்மித்

ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் ஸ்மித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் சிந்திக்காக ஸ்டீவ் ஸ்மித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

55
ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories