யுவராஜ், பும்ரா உள்பட காதலர் தினத்தை கொண்டாடிய கிரிக்கெட் பிரபலங்கள்!

Published : Feb 15, 2023, 11:06 AM IST

கிரிக்கெட் பிரபலங்களான ஜஸ்ப்ரித் பிம்ரா, யுவராஜ் சிங், டேவிட் வார்னர், மலிங்கா ஆகியோர் உள்பட பலரும் தங்களது காதல் மனைவியுடன் இணைந்து காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

PREV
16
யுவராஜ், பும்ரா உள்பட காதலர் தினத்தை கொண்டாடிய கிரிக்கெட் பிரபலங்கள்!
ஜஸ்ப்ரித் பும்ரா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது காதல் மனைவி சஞ்சனா கணேஷ் உடன் இணைந்து காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த பையனுக்கான இதயக் கண்கள் கொண்ட ஈமோஜி நாள் முழுவதும் என்று சஞ்சனா கணேசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி தொலைக்காட்சி பிரபலமான சஞ்சனா கணேஷ் என்பவருக்கும், பும்ராவிற்கும் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

26
டேவிட் வார்னர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ள டேவிட் வார்னர் தனது காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, காதலர் தின வாழ்த்துக்கள்...! என் அன்பே உன்னை பார்க்க என்னால் காத்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

36
யுவராஜ் சிங்

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி யுவராஜ் சிங்கிற்கும், மாடலும், நடிகயுமான ஹசல் கீச்சிற்கும் திருமணம் நடந்தது. தற்போது திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், தனது காதல் மனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
 

46
மனோஜ் திவாரி

ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கிரிக்கெட்டர் மனோஜ் திவாரிக்கும், சுஷ்மிதா ராய்க்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறி தினந்தோறும் நீ தான் என் காதலி என்று இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

56
லசித் மலிங்கா

ஆடுகளத்தை விட்டு விட்டு எனது அழகான மனைவியுடன் நேரத்தை செலவழிப்பதை விட வேறும் எதுவும் இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார். லசித் மலிங்காவிற்கும், நடன இயக்குனரான தன்யா பெரேராவுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி திருமணம் நடந்தது.
 

66
உஸ்மான் கவாஜா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ள உஸ்மான் கவாஜா இன்ஸ்டாவில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னால் அவனது முதலாளி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள். காதலர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories