முன்னதாக ஜிதேஷ் சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த போட்டி வரை அதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்று விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.
அவர், "மீண்டும் அதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. டிஜேக்கள் எதிரணி வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. பெருமளவில் எங்களை ஆதரிக்கும் அன்பான ரசிகர் பட்டாளம் எங்களுக்கு இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்" என்றார்.
சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, டிஜே கூறிய கருத்துக்களுக்கு அவர்கள் ஆளானார்கள், இது தவறானது. ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் டிஜேக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர், ஆனால் எதிரணி வீரர்களைக் குறிவைப்பது எங்கள் நிர்வாகத்திற்குச் சரியாகத் தோன்றவில்லை. நாங்கள் எங்கள் எதிராளிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கோ அல்லது அவமதிப்பதற்கோ அங்கு இல்லை," என்றார்.
கடந்த ஆண்டு ஜிதேஷ் சர்மா அந்தப் பாடலைப் பாடியபோது அது வைரலானது, இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளானது. இருப்பினும், அத்தகைய கருத்துக்கள் எதிரணி வீரர்களை நோக்கியவை அல்ல என்பதை உறுதிசெய்ய, சென்னை அணி நிர்வாகம் அப்போது தலையிட்டது.